யாழ் பிரபல ஆசிரியர் விபத்தால் மரணம். நீதி கிடைக்குமா!
யாழ் பிரபல ஆசிரியர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரான வேலுப்பிள்ளை யுகபாலசிங்கம் எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் பதில் நீதிபதி ஒருவரின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் கதவு திடீரென திறக்கப்பட்டதால் கார் கதவில் மோதுண்டு வீழ்ந்த ஆசிரியரை பின்னால் வந்த பேரூந்து மோதியதில் படுகாயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது. பதில் நீதவானும் சாரதியும் இன்றே பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதில் நீதவானின் சாரதியும் பேரூந்தின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் யாழ் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.