விபச்சார விடுதி சுற்றிவளைப்பு. 10 பெண்கள் கைது!
கொழும்பில் விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டதில் விடுதி உரிமையாளர் உட்பட 10 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரைட் பகுதியில் மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதியே சுற்றிவளைக்கப்பட்டு அதன் உரிமையாளரான 60 வயதான பெண் ஒருவர் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் 27 தொடக்கம் 52 வயதானவர்கள் எனவும் இவர்கள் களனி, பிலியந்தலை, கண்டி, கொக்கரெல்ல பகுதிகளைச் சேர்ந்த திருமணமான பெண்கள் எனவும் கொழும்பில் உயர் தொழில் செய்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு கொழும்பு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபச்சார நிலையம் இயங்கிய கட்டடத்திற்கு மாதம் மூன்று இலட்சம் வாடகையாக செலுத்தப்பட்டுள்ளது. மசாஜ் நிலையம் எனும் பெயரில் நீண்ட காலமாக விபச்சாரம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விடுதி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.