உடுவில் மல்வம் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!
முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட துயரத்தை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தில் உடுவில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் லீனஸ் அவர்களது தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.