யாழ் மாவட்ட செயலகம் ஆளுநர் அலுவலகத்தை முடக்கி போராடுவோம் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம் எச்சரிக்கை!
கரையோரப் பகுதி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெயை பெற வசதி ஏற்படுத்த தவறினால் தமிழ் அரசியல்வாதிகளின் அலுவலகங்கள், மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் என முற்றுகையிட்டு போராடுவோம் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பித்தால் அதனை அடக்க முடியாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன செயலாளர் நா. வர்ணகுலசிங்கம்
தெரிவித்தார்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
மண்ணெண்ணெய் பல நாட்களாக வடக்கிற்கு வரவில்லை. தென்னிலங்கையில் சகல இடங்களுக்கும் எரிபொருள் போய்க்கொண்டிருக்கின்றது.
வடபகுதிக்கு மாத்திரமே மண்ணெண்ணெயும் எரிபொருளும் தடைபட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தமிழ் அரசியல்வாதிகளும் கண்ணை மூடிக் கொண்டு இருக்கின்றார்கள். கடற்றொழில் குடும்பங்கள் பட்டினிச் சாவை எதிர் கொண்டுள்ளது.இதனால் கடற்றொழிலாளர் சங்கங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக கொந்தளித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்றார்.