கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
கடலுக்கடியில் பாரிய எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளதையடுத்து பல நாடுகளிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொங்கா, நியூசிலாந்து உட்பட சில நாடுகளிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொங்காவில் வீடுகள், கட்டடங்கள் போன்றவற்றுக்குள் கடல் நீர் உட்புகும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. பசுபிக் தீவுகளில் வாழ்பவர்களை உயரமான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க சமோவா பகுதிக்கும் அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.