இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு (EDB) புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Brown & Company PLC இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி மங்கள விஜேசிங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 2023 முதல் EDB இன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய நிர்வாக நிபுணரான கலாநிதி கிங்ஸ்லி பெர்னார்டுக்குப் பதிலாக விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.