புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஆட்கடத்தலை தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோஷல விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
‘தலைவரிடம் சொல்லுங்கள் என்ற புதிய வேலைத்திட்டம் நேற்று SLBFE தலைமை அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறும் போது தேவையற்ற அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர், அதே வேளையில் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் தரகர்கள் அவர்களை நிதி நன்மைகளுக்காக சுரண்டுவதில் தலையிடுவதாக SLBFE தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு புதிய அரசாங்கம் செயற்படும் என கோசல விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க எடுக்கப்பட்ட பின்வரும் நடவடிக்கைகளை அவர் மேலும் கோடிட்டுக் காட்டினார்;
டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள SLBFE தலைமைக் காரியாலயத்தின் முதல் மாடியில் உள்ள சிறப்பு கருமபீடம் மூலம் ‘தலைவருடன் சொல்லுங்கள் நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வகையான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் மற்றும் குறைகள் இங்கே பதிவு செய்யப்படும்.
முறைப்பாட்டு பெட்டி நிறுவப்பட்டுள்ளது, அதில் பெறப்படும் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்படும்.
முறைப்பாட்டாளரின் ரகசியத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0112 864188 என்ற தொலைபேசி இலக்கம், 0717 593 593 என்ற WhatsApp இலக்கம் அல்லது talkchairman@slbfe.lk என்ற மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் .
“எந்த பிரஜையும் தங்கள் முறைப்பாட்டை சமர்ப்பிக்கலாம். அவர்கள் பல்வேறு வழிகளில் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம். வெளியாட்களால் அல்லது அரசு அதிகாரிகளால் ஏற்படும் அநீதி குறித்து முறைப்பாடு அளிக்கலாம். எந்த விதமான அநீதியும் பொருட்படுத்தாமல், தீர்வுகளை வழங்குவதற்கு நான் பிரிவினை இன்றி பாடுபடுவேன்” என்று SLBFE தலைவர் உறுதியளித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மக்களுக்கு மிகவும் சாதகமான சேவையை வழங்குவதற்கும் முறையான அமைப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.