எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக “காஸ் சிலிண்டர்” சின்னத்தில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு கோரி யாழ். மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்றைய தினம் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான அணியினர் நயினாதீவு ,அனலை தீவு பகுதிகளில் மக்களை சந்தித்து கலந்துரையாடியதோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான துண்டு பிரசுரங்களை விநியோகித்து தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுராதபுரத்தில் ஜெய மகா போதி விகாரையில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளதோடு, அனுராதபுரத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.