காணியில் புல்மேய்ந்ததால் மாட்டின் காலை துண்டாக்கிய கொடூரம்!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முன்கோடை பகுதியில் காணியொன்றினுள் புல்மேய்ந்த மாட்டின் கால் துண்டாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது நேற்றுறைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் முன்கோடை பகுதியில் காணியொன்றில் மேய்சலிற்காக நின்ற பசு மாட்டின் பின் கால் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் மற்றைய காலில் வெட்டுக்காயமும் ஏற்படும் வகையில் விசமிகளால் மாடு தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் உரிமையாளரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.