நல்லூரிற்கு வரும் பக்தர்கள் தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு
யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கோரிக்கை!
நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,
ஆலய வளாகத்தில் தேவையானஅளவு பாதுகாப்பு பொலிசாரினால் வழங்கப்பட்டுள்ளது
அத்தோடு விசேட பொலிஸ் அணியும் இங்கே வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்
யாழ்ப்பாணத்தில் மிகவும் முக்கியமான உற்சவமாக நல்லூர் ஆலய உற்சவம் இடம் பெறுவதனால் இந்த ஆலயத்திற்கு வரும் அடியவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்படும்
ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன் தங்க ஆபரணங்கள் அணிந்து ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
ஏனென்றால் அதிக மக்கள் கூடும் இடத்தில் திருட்டு சம்பவங்களும் இடம்பெறலாம். அந்த திருட்டுக்களை தடுப்பதற்கு தங்களுடைய ஒத்துழைப்பு முக்கியம்.
திருட்டுச் சம்பவங்களை மேற்கொள்வதற்கு வெளி மாவட்டங்களிலிருந்து ஒரு சிலர் இங்கே அணியாக வந்து செயற்படுவார்கள்
எனவே தங்களுடைய நகைகள் மற்றும் அதிக பணங்களை ஆலயத்திற்கு வரும்போது எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
எனவே பொதுமக்கள் திருட்டு சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் இருந்தால் பொலிசாரிடம் தெரியப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
அத்தோடு தற்போதைய கால கட்டத்தில் டெங்கு மற்றும் கொரோனாத் தொற்று அதிகரித்து காணப்படுகின்றது எனவே கடந்த காலங்களில் போலீசார் மற்றும் சுகாதாரப் பிரிவினருக்கு பொது மக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு வழங்கியதைப் போல தற்போதுள்ள உள்ள நிலையிலும் பொலீசார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு நோய் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்