தற்போது சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலையானது அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
நகர்ப்புறங்களை அண்மித்த பகுதிகளில் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளதாகத் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் சில ஊழல் அதிகாரிகளின் செயற்பாடுகளினால் தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம அழைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் ஒவ்வொறு ஆண்டும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேங்காய் உற்பத்தி குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் உள்ளூர் தேங்காய் நுகர்வுக்கு முக்கிய வாய்ப்பு அளிக்கப்பட்டு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
ஆனால் அதிகாரத்தின் சில ஊழல் அதிகாரிகள் கடத்தல்காரர்களுடன் இணைந்து தேங்காய் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
தேங்காய் ஏலத்தில், தற்போது இந்த நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 160 ரூபாவாக உள்ளது.ஆனால், இதன் விலை 170, 180 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.