சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்மாதம் இன்னும் சில தினங்களில் சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது. அதற்கான அனுமதியை வழங்கியுள்ளோம்.
இதனால் இலங்கையின் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது