By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: வடக்கு புகையிரத பகுதி நாளை திறப்பு!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

வடக்கு புகையிரத பகுதி நாளை திறப்பு!

Published October 21, 2024
Share
1 Min Read
SHARE

நவீனமயமாக்கப்பட்ட வடக்கு புகையிரதத்தின் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதி நாளை (22ஆம் திகதி) திறக்கப்படவுள்ள போதிலும், இந்த இடைப்பட்ட நிலையங்களில் உள்ள ரயில்வே அதிகாரிகள் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

3,000 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட இந்த புகையிரத மார்க்கத்தை, குறைபாடுகளுடன் ரயில்வே துறை கையகப்ப டுத்தியதே இதற்கு காரணம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன நேற்று தெரிவித்தார்.

இந்த பாதை நவீனமயப்படுத்தப்படுவதற்கு மேலதிகமாக இருந்த சமிக்ஞை அமைப்பும் அகற்றப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பற்ற நான்கு புகையிரத கடவைகளில் கேட்கள் பொருத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தலாவ, தம்புத்தேகம, கல்கமுவ மற்றும் அநுராதபுரம் புகையிரத நிலையங்களுக்கு அருகில் உள்ள கடவைகள் கையால் இயக்கப்படும் வாயில்களாக மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த போதிலும் இதுவரை பாதுகாப்பு கதவுகள் பயன்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

உரிய தரம் இன்றி மேற்கொள்ளப்படும் நவீனமயமாக்கல் பணிகளால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பரிகாரமாக மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியில் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத சாரதிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களை தாம் பொறுப்பேற்கப்போவதில்லை எனவும், அதற்கமைய பயணச்சீட்டு வழங்கப்படவோ, பொதிகள் மற்றும் பொருட்கள் பெறப்படவோ அல்லது புகையிரத திணைக்களத்திற்கு வருமானம் அறவிடப்படவோ மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

TAGGED: வடக்கு புகையிரத பகுதி நாளை திறப்பு
Editor S.Shanuja October 21, 2024 October 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை!
Next Article இலங்கைக்கு வந்த ஜூலியஸ் மடா பியோ!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?