நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (09) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி – வலப்பனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதுடன், சிறுமியொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த 7 வயதுடைய சிறுவன் மற்றும் 15 வயதுடைய சிறுமியின் மீது மோதி, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.
இதன்போது,பலத்த காயமடைந்த இருவரில் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வலப்பனை, முலஹல்கெலே பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பாதுக்க – தும்மோதர வீதியில் தும்மோதரவிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தும்மோதர பகுதியைச் சேர்ந்த பாதுக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 53 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது.
அத்துடன், கொழும்பு அவிசாவளை வீதியின் துன்னான பகுதியில் அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின் புறத்தில் அமர்ந்திருந்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹங்வல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலும், குறித்த விபத்துக்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளdu;.