By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: யூடியூபர் இர்பான் மீது கடும் கண்டனம்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

யூடியூபர் இர்பான் மீது கடும் கண்டனம்!

Published October 22, 2024
Share
2 Min Read
SHARE

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்பானை மன்னிக்க முடியாது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான இர்பான் – ஆசிபா தம்பதிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், வீட்டில் இருந்து ஜூஸ் குடித்து விட்டு மருத்துவமனைக்கு வருதல், மருத்துவமனையில் பிரசவத்துக்கு முந்தைய கவனிப்பு மற்றும் பிரசவத்தின் போது நடக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இர்பானின் இந்த செயலுக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, கடந்தாண்டு தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை துபாய் நாட்டில் பரிசோதனை செய்து, அது தொடர்பான வீடியோவை இர்பான் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. அந்த வீடியோ தொடர்பாக பதிலளிக்குமாறு இர்பானுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, அந்த அந்த வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கினார்.

தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதுவரை மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடாத இர்பான், மனைவியின் பிரசவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான், மருத்துவர், மருத்துவமனை மீது நடவடிக்கை சுகாதாரத் துறை முடிவு செய்திருந்து.

இதுகுறித்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: “குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது. இந்தமுறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும், விடமாட்டோம். அவர் மன்னிப்புக் கேட்டாலும், அதை ஏற்க முடியாது . இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. மருத்துவர் நிவேதிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பயிற்சியை தொடர தடை விதிக்க மருத்துவ கவுன்சில் சார்பில் பரிந்துரைக்கப்படும். தவறு செய்தவர்களுக்கு அரசு நிச்சயம் தண்டனை வழங்கும்.” என்று அவர் கூறினார்.

TAGGED: யூடியூபர் இர்பான்
Editor S.Shanuja October 22, 2024 October 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article மாகாண ஆளுநர்களுடன் அநுர சந்திப்பு!
Next Article 1997 என்ற அவசர தொலைபேசி எண் அறிமுகம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?