எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதற்கான அபாயகரமான சூழ்நிலை காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கமன்பில தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 3 வது வாரத்தில் இருந்தே எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டொலர்களை பெற்று எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாகவும், டொலர் கிடைக்காத பட்சத்திலேயே எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனையைச் சந்திக்க நேரிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.