நாட்டைச் சூழவுள்ள வளிமண்டல தளம்பல் நிலைமை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவும் எனவும் அந்நிலைமை இன்று முதல் சற்று அதிகரிக்க கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும்.
மேலும், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.