சுற்றுலா விசாவை பயன்படுத்தி நாட்டுக்கு வருகை தந்து சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு சீனப் பெண்கள் நேற்று திங்கட்கிழமை (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.
கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீனப் பெண்கள் இருவரும் 47 மற்றும் 48 வயதுடையவர்கள் ஆவார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காகக் கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.