வடக்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த வடக்கு அந்தமான் கடற்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகி டானா புயலாக உருவெடுத்துள்ளது.
டானா புயல் இன்று அதிகாலையில் வடமேற்கு வங்காள விரிகுடாவில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கையாகக் கொல்கத்தா விமான நிலையம், இன்று இரவு 8 மணி முதல் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.