இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.
நுவரெலியா மாவட்டத்தில், யானை சின்னத்தின் கீழ் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், 2024 ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.
கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது முதலாவது வாக்கினை காலை 07 மணிக்கு செலுத்தினார்.
மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பதிவுசெய்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பாராளுமன்ற அதிகாரிகள் அனைவரின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான சண்முகம் குகதாசன் இன்று (14) தனது வாக்கினை பதிவு செய்தார்.
தேர்தல் பணிகளுக்காக 63,145 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் நேரடியாக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் 3,200 விசேட அதிரடி படையினரும், 11 ஆயிரம் முப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
புதிய பாராளுமன்றம் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பாராளுமன்றத்தின் அனைத்து அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
நடைபெற்றுவரும் பொதுத் தேர்தல் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.