கடந்த சில நாட்களாக மாணவி ஒருவர், போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்குமாறும் கோரி கொழும்புக்கு சைக்கிளில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் வந்த 14 வயது மாணவி பாத்திமா நடா, பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை திங்கட்கிழமை(14)காலை கையளித்துள்ளார்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் போதைப்பொருள் தடுக்குமாறும் கோரியே மகஜரை கையளித்துள்ளார்.