காணாமல் போன யுவதியும் சடலமாக மீட்பு!
நேற்றைய தினம் கெரண்டி எல்ல நீர் வீழ்ச்சியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன 22 வயதான யுவதி இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் உமா ஓயா கெரண்டி எல்ல நீர் வீழ்ச்சியில் 11 பேர் நீராடிய நிலையில் ஐவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் நால்வர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டனர். ஒருவர் காணாமல் போன நிலையில் தொடர்ந்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போன யுவதியின் சடலமே இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி அட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த திரிஷா(21), டேவிட் சஞ்சு(19), சசிப்பிரியா(20), ஹற்றன் பகுதியைச் சேர்ந்த பவானி (24), டேவிட் குமார் (23) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவர் சகோதரர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.