யாழில் பொது இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாவற்குழி ஐயனார் கோயில் அருகாமையில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 21 வயதான இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொதுநோக்கு மண்டபத்தில் சடலம் ஒன்று தூக்கில் தொங்குவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.