யாழில் யுவதி கூட்டு பாலியல் பலாத்காரம்!
யாழில் யுவதி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைபேசியில் அறிமுகமான காதலனும் அவனது நண்பர்களும் சேர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதி ஒருவரால் முறையிடப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டில்
‘மிஸ் கோல்’ ஒன்றினூடாக துன்னாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் அறிமுகமாகியதாகவும் பின்னர் காதலித்ததாகவும் நேற்று காலை 10 மணியளவில் முதன்முறையாக நேரில் சந்தித்து கதைத்ததாகவும் பின்னர் ஐஸ்கிரீம் கடையொன்றிற்கு அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கித் தந்தார் எனவும் தெரிவித்தார்.
இன்றுகாலை தாயாருடன் கதைப்பதற்காக என அழைத்துச் சென்று திக்கம் பகுதியிலுள்ள பற்றைப் பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தண்ணீர் குடித்துவிட்டு வருவதாக கூறிச் சென்றார்.
அங்கு அவரது நன்பர்கள் மூன்று பேர் வந்து கை கால்கள் வாயைப் அழுத்திப்பிடித்து பலாத்காரம் செய்தனர். பின்னர் அங்கு வந்த காதலன் தொலைபேசி , 40 000 ரூபா பணம் என்பனவற்றை பறித்துவிட்டு வீதியோரத்தில் இறக்கிவிட்டு சென்றதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பலாத்காரம் நிகழ்ந்ததாக கூறப்படும் திக்கம் பகுதி பருத்தித்துறை பொலிஸ் பகுதி என்பதால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு மாற்றப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் துன்னாலையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
துன்னாலையைச் சேர்ந்த கும்பல் ஒன்று தொலைபேசி ஊடாக காதல் தொடர்புகளை ஏற்படுத்தி துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரும் முன்னர் இவ்வாறு பலாத்காரம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.