விபச்சார விடுதி சுற்றிவளைப்பு, மூவர் கைது!
கண்டியில் மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டு மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் நீண்ட காலமாக விபச்சாரம் இடம்பெற்று வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுதியின் உரிமையாளர் மற்றும் 27,28 வயதான யுவதிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்விடுதியில் பெண்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.