யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் மக்களின் துயர் தொடர்கிறது_பொன் சுதன்!
யுத்தம் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் இன்றும் மக்களின் அவல வாழ்வு முடிவுக்கு வரவில்லை. இதுவரை எங்கள் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது என பொன் சுதன் தெரிவித்துள்ளார்.
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொன் சுதன் கிளிநொச்சி பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நான் நாடாளுமன்ற அரசியலுக்கே புதியவன். மக்கள் சேவையில் நிறைந்த அனுபவம் உள்ளது. என்னை இந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் இரண்டு வருடங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை தரமுயர்த்துவேன்.அதற்கான திட்டமும் அனுபவமும் என்னிடம் உள்ளது என்றார்.
பொன் சுதன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் (யாழ் தேர்தல் தொகுதி) தண்ணீர் பைப் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.