யாழ் தென்மராட்சி வரணிப் பகுதியில் துப்பாக்கிச்சூடு. ஒருவர் காயம்!
யாழ் தென்மராட்சி வரணி இடைக்குறிச்சிப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதி.இச் சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.
வரணி இடைக்குறிச்சி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியை சோதனையிட்டபோது ஏற்பட்ட நிலமையினை அடுத்து விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதில் ஒருவர் கையில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.