By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நாட்டை ஐக்கிய மக்கள் சக்தியால் கட்டியெழுப்ப முடியும் : சஜித்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நாட்டை ஐக்கிய மக்கள் சக்தியால் கட்டியெழுப்ப முடியும் : சஜித்!

Published October 29, 2024
Share
2 Min Read
SHARE

நிர்க்கதிகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை நடத்தி வரும் மக்களுக்கு தேர்தலில் வாக்குறுதியளித்தபடி மக்கள் எதிர்கொண்டு வரும் அழுத்தங்களை குறைப்பதாக தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்தது. என்றாலும் இந்த மாற்றங்களை செய்ய முடியாத ஜே.வி.பிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வழங்காதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த பெரும்பான்மை வழங்கப்பட வேண்டும். இது தான் நாட்டிற்கு பொருத்தமான தெரிவாக இருக்கும். ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் அநுர குமார திசாநாயக்க கூறியது போல் அதிகாரத்திற்கு வந்தும் நேரடி மற்றும் மறைமுக வரிகளை அவரால் குறைக்க முடியாதுபோயுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து உடன்படிக்கையை மாற்றியமைப்பேன் என்று தெரிவித்தார். என்ற போதிலும், அவரால் இன்று மாற்றியமைக்க முடியவில்லை என்றார்.

2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு  கொலன்னாவ கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று கொலன்னாவ பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.மரிக்காரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, தேங்காய்களுக்கு வரிசையும் காணப்படுகின்றன. 2028 ஆம் ஆண்டு முதல் கடனை அடைப்பதாக முன்னாள் ஜனாதிபதி நாட்டையே சிக்கலில் தள்ளியுள்ளார். இதற்கு இன்னும் நான்கு வருடங்கள் மட்டுமே உள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு இந்த கடனை செலுத்த முடியாது. இதற்கு விரைவான பொருளாதார வளர்ச்சி அவசியமாகும். இந்தக் கடனை திருப்பிச் செலுத்த, பெரும்பான்மையான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் 2028 ஆம் ஆண்டு நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு ஏற்ற இணக்கப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியால் கையெழுத்திடலாம். வரிசை யுகத்திற்கு பதிலாக அபிவிருத்தி யுகத்தை உருவாக்கும் நாட்டை ஐக்கிய மக்கள் சக்தியால் கட்டியெழுப்ப முடியும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

TAGGED: சஜித் பிரேமதாச
Editor S.Shanuja October 29, 2024 October 29, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு!
Next Article வவுனியாவில் பெற்றோர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

பூநகரியில் பயங்கர விபத்து: இரு சிறுமிகள் உட்பட ஐந்து பேர் தீக்காயங்களுடன் படுகாயம்!

June 30, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

மூட நம்பிக்கையால் இளைஞன் பரிதாப மரணம்: அராலியில் துயரம்!

June 29, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பாகத்தினரல் கிழக்கில் உதவி!

May 25, 2025
இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?