நாட்டில் பெரும்பாலான பெண்கள் அழகுக்கலை நிலையங்கள் ஊடாக போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று குளியாப்பிட்டியில் நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடும்போது
நாட்டில் அதிகளவு பெண்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இதில் ஐஸ் போதைப்பொருள் பாவனை பெண்களிடம் தற்போது அதிகரித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்திலேயே இந்த உயர்வு பதிவாகியுள்ளது.
அழகு கலை நிலையங்களின் ஊடாக இந்த பழக்கத்துக்கு பெண்கள் அடிமையாகின்றனர்.
அடிக்கடி அழகு கலை நிலையங்களுக்கு செல்லும் தங்களது பிள்ளைகள் குறித்து பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.