அச்சுவேலி பகுதியை சோ்ந்த 15 வயதான சிறுமியை திருமணம் செய்து தலைமறைவாகி வாழ்ந்து வந்த பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த 20 வயதான இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறுமியும் மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸில் வசிக்கும் கல்வியங்காட்டை சோ்ந்த 20 வயதான இளைஞன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னா் யாழ்ப்பாணம் வந்துள்ளாா்.
அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியுடன் காதல் மலர்ந்ததை அடுத்து சிறுமியை திருமணம் செய்து தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டுக்கமைய அச்சுவேலி பொலிஸார் மற்றும் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சிறுமியும் இளைஞனும் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.