உயர்தர வகுப்பு மாணவி காணாமல் போன நிலையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்துவரும் 18 வயதான மாணவி ஒருவர் காணாமல் போன நிலையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. மாணவி காணாமல் போனமை தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த மாணவி கடந்த வியாழக்கிழமை தனியார் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிய நிலையில் காணாமல் போயுள்ளார். மாணவியின் தந்தை பொலிஸ் உத்தியோகத்தராக கொழும்பில் கடமையாற்றி வருகின்றார்.
மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0774935652, 0772432257, 0772608819 ஆகிய இலக்கங்களிற்கு தகவல் தெரிவிக்குமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.