இந்த நாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பல்வேறு முறைப்பாடு பிரிவுகளில் குவிந்திருந்த 24,381 முறைப்பாடுகள் இரண்டு வாரங்களுக்குள் விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணைகளை ஆரம்பிக்காத மற்றும் ஆரம்பிக்கப்படாத முறைப்பாடுகளை இரண்டு வாரங்களுக்குள் உடனடியாக விசாரணை செய்து முடிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு, ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விசாரணை செய்து முடிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் மாகாண மட்டத்தில் அறிக்கைகள் கோரப்பட்டதாகவும், இதன்படி குவிக்கப்பட்ட 24,381 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டன.
புதிதாக சேர்க்கப்பட்ட முறைப்பாடுகளுடன் சேர்த்து சுமார் 7,000 முறைப்பாடுகள் மட்டுமே பொலிஸ் நிலையங்களில் இருப்பதாகவும், அவைகளை விரைந்து முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.