யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் 50 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளவாலை வலித்தூண்டல் பகுதியிலுள்ள பற்றைக்காணியன்றில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவை நீதிமன்றில் ஒப்படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.