கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் கட்டணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஹோட்டலில் கடந்த 18 நாள்களாக அந்தப் பிக்கு தங்கியுள்ளார்.
இதற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் 5 லட்சத்து 27ஆயிரத்து 820 என என ஹோட்டல் உரிமையாளரால் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணத்தை குறித்த பிக்கு செலுத்தாது தப்பிச் சென்றுள்ளாது.
அதனையடுத்து வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த பிக்குவை கைதுசெய்துள்ளனர்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.