ராஜகிரிய – மதின்னாகொட வீதியில் உள்ள கரேஜ் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க 4 சேவை வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இது தவிர தீயணைப்புத் துறையிலிருந்து இரண்டு சேவை வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த தீ, தற்போது 02 வீடுகளுக்கு பரவியுள்ளதாக, கோட்டை தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.