குளத்தில் குளிக்கச் சென்றவர் நீரி்ல் மூழ்கி உயிரிழந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
வரணி குடமியன் பகுதியிலுள்ள சப்ரா குளத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை குளிக்கச் சென்றவரே இவ்வாறு நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதேபகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் மணிவண்ணன் (வயது–38) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.