நான்கு அத்தியாவசிய உணவு பொருள்களின் விலைகள் நேற்றுமுதல் நடைமுறைக்கு வரும் குறைக்கப்பட்டுள்ளன என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ சிவப்பு பச்சை அரிசி 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 199 ரூபாவாகவும் கீரி சம்பா கிலோ 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 225 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 225 ரூபாவாகவும் ஒரு கிலோ நெத்தலி 150 ரூபாவால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என சதொச குறிப்பிட்டுள்ளது. (