கோயில் திருவிழாவில் இளைஞன் குத்திக் கொலை!
மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் கோயில் திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் குத்திக் கொலை.
வாகனேரி குளத்தமடு பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது உடலில் கத்திக் குத்து காயங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோயில் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான நேற்றைய தினம் இரவு இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு குழுச்சண்டையாக மாறியுள்ளது. இதன் போதே இளைஞன் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குழுச் சண்டையில் இருவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.