பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக, நாளை (03) பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளைய தினம் 2090 கடிதங்களை வகைப்படுத்தும் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக, சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடிதங்களை விநியோகிக்க 8000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கவுள்ளனர்.
உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு அறிவிப்புப் பத்திரங்கள் எதிர்வரும் 07ஆம் திகதி வரை வீடு வீடாக விநியோகிக்கப்படும்.