கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கலப்பு ரயில் இன்று (19) பிற்பகல் தியத்தலாவ நிலையத்தில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் மலையக ரயில் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.