பூஸ்டர் தடுப்பூசி ஏற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
கொரோனாத் தடுப்பூசியின் மூன்றாவது ‘டோஸ்’ பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்வதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி மூன்றாவது டோஸான ‘பூஸ்டர்’ தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பில் ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு நாடுகளிலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுகாதார அமைச்சரிடமும் சட்டமா அதிபரிடமும் ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.