துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு!
முல்லேரியா வங்கி சந்தி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் முல்லேரியா பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான சுமுது ருக்ஷான் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சம்பவத்தில் 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் முல்லேரியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.