இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! கொலை செய்யப்பட்டாரா என தீவிர விசாரணை!
மன்னார் பள்ளமடு விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அண்மையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் இன்று காலை நிகழ்ந்துள்ளது.
சன்னார் கிராமத்தைச் சேர்ந்த கே. பாஸ்கரன் எனும் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்று மாலை விடத்தல்தீவு சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார். குறித்த நபர் இரவு வீட்டிற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை பள்ளமடு விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அண்மையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்திற்கு அருகில் இவரது மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது. இது கொலையா? என்பது தொடர்பில் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.