கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கு, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு அவசர வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு கீழான அதிகாரிகள் அதிக கடமைப் பணிகள், தொலைதூரப் பிரதேசங்களில் பணியமர்த்தல், முறையான பதவி உயர்வு நடைமுறைகள் இல்லாமை, முறையற்ற இடமாற்ற முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினைகளை திறம்பட தீர்க்கும் நோக்கில், கட்டமைக்கப்பட்ட அமைப்பை ஏற்படுத்துவதற்கு உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
பொலிஸ் திணைக்களத்தின் கௌரவம் மற்றும் நிபுணத்துவத்தை நிலைநிறுத்துவதற்கு ஏற்ற பணிச்சூழலை உருவாக்குவதற்கான தனது அர்ப்பணிப்பை அமைச்சர் விஜேபால வலியுறுத்தினார்.