ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து – ஆசிய வர்த்தக சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பசுமை பேச்சு ஒன்றியத்தின் கூட்டத்திலும் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார். எரிசக்தி வளத்தை உறுதி செய்யும் இலங்கையை கட்டியெழுப்புதல் என்னும் தலைப்பில் ஜனாதிபதி உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த விஜயத்தின் போது பல்வேறு பிரமுகர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சுவிட்சர்லாந்து விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி எதிர்வம் 18ஆம் திகதி உகண்டா விஜயம் செய்ய உள்ளார்.
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கு பற்றும் நோக்கில் அவர் இவ்வாறு உகண்டா விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி எதிர்வரும் 24ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.