இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உபதலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.பிலிப்குமார் இலங்கை தொழிலாளர் காங்ரஸில் இருந்து தாம் விலகியுள்ளதாகவும் கட்சியிலிருந்து தாம் விலகிகொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை காலமும் எந்தவித கட்சிதாவல்களையும் மேற்கொள்ளாது ஒரே கட்சியான இலங்கை தொழிலாளர் காங்ரஸில் மாத்திரம் தாம் அங்கம் வகித்து வந்ததாகவும் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானங்களையும் எட்டப்படவில்லை. எனது 37வருடகால அரசியலினால் தனது வாழ்க்கையை இந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
இந்த விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானை தொடர்பு கொண்ட போதும் அது பயணளிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.