முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் விடுவிக்கப்ப்டட காணியில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடி குண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அண்மையில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட இரண்டு பாரிய வெடிகுண்டு இருப்பதை அங்கு வேலி அமைப்பதற்காக சென்ற நபர் இனம் காட்டியதை தொடர்ந்து அதனை இரும்பிற்கு விற்பதற்காக எடுத்து செல்லமுற்பட்ட போது புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த 6 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளனர்.
ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோக்கிரம் எடைகொண்ட குறித்த குண்டுகள் இரும்பிற்காக கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.