ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவின் ஒரு பகுதியை ஜனவரி முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனிடையே வைத்தியர்களினதும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களினதும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
35,000 ரூபாவாக இருந்த வைத்திய அதிகாரிகளின் வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு 70,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான கல்விக் கொடுப்பனவு 25 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த கொடுப்பனவுகளை, ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.