யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது நாளை(25) யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ். ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது.