தற்போது கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மாசி மாதம் இடம்பெறவுள்ள உயர்தர மாணவர்களின் பெறுபேற்றினை அதிகரித்து அவர்களை எதிர்கால கல்வித்துறையில் பிரகாசிக்க வைக்கும் நோக்கில் இக்கருத்தரங்கு முண்ணனி வளவாளர்களினால் நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதியிலிருந்து இக்கருத்தரங்கு சூம் செயலி மூலம் யாழ்.மாவட்டத்தின் முண்ணனி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட உள்ளது.
கருத்தரங்கினை வழங்க உள்ள முண்ணனி வளவாளர்கள்
01) கணக்கீடு – இலங்கையின் பிரபல ஆசான் D.ஷாம் (B.com, M.com)
02) வணிகக்கல்வி – சச்சிதானந்தம் ரிஷிகேசன் B.B.A(Hons), H.R.M(SPL),P.G.D.E – யா/ சென்.ஜோன்ஸ் கல்லூரி
03) பொருளியல் – S.S.சிறி (B.com)
யா/ வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி
04) புவியியல் – N.பாபு
05) தமிழ் – பா.பத்மநாதன்
A.K கீர்த்திராஜன்
B.A(Hons), M.A(Hons) in Tamil
06) அரசியல் – இளங்கோ
அரசியல் – செல்வராசா பிரதாப்
B.A (Hons)po.science spl
Diploma in counseling
Diploma in HRM
LLB(R)
யா / சங்கானை சைவப்பிரகாச மகா வித்தியாலயம்
07) வரலாறு – யோகேஸ்வரன் பிரதீபன்
B.A(Hons), M.A(Hons) – யா / புனிதநகர் தமிழ் வித்தியாலயம் கற்கோவளம் பருத்தித்துறை
08) அளவையியல் – E.S.பவன் B.A(hons),Dip.in.Ed,MEd(1st Class) யா/பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம்
09) இந்து நாகரிகம் – சிறிஸ் B.A(Hons) Hindu.spl
10) கிறிஸ்தவ நாகரிகம் – J.J.வசந்தன்
B.A(Hons) Chri.Civili.Spl
11) ICT – பிரபல ஆசான்
12) ஊடகம் – பிரபல ஆசான்
13) மனைவியியல் – பிரபல ஆசான்
14) நாடகமும் அரங்கியலும் – ஆருரன்
இக்கருத்தரங்கின் மூலம் எதிர்பார்க்கப்படுபவை.
01) நாட்டில் நிலவி வருகின்ற கொரோனாத் தொற்றுக்காரணமாக சூம் செயலி மூலம் இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்படுவதனால் மாணவர்களின் ஆரோக்கிய நிலைமை உறுதிப்படுத்தப்படுகின்றது.
02) தேசிய ரீதியாக நடத்தப்படுவதானால் அனைத்துத் தமிழ் பேசும் மாணவர்களும் பங்குபற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்படுகின்றது.
03) நாட்டின் முண்ணனி வளவாளர்கள் கலந்து கொண்டு இறுதிப்பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வினாக்களுக்கான தயார்படுத்தல் மேற்கொள்ளப்படுவதால் இறுதிப் பரீட்சையை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்ள தயார் படுத்தப்படுகின்றது.
04) முற்று முழுதாக மாணவர்களுக்கான இலவச கருத்தரங்காக நடத்தப்படுவதால் அனைத்து மாணவர்களும் பங்கு பற்ற வசதி ஏற்படுத்தப்படுகின்றது.
05) வறுமை காரணமாக இக்கருத்தரங்கில் பங்கு கொள்ள முடியாமல் போகும் மாணவர்களுக்கு விசேட ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்.
06) முற்றிலும் இறுதிப்பரீட்சைக்கு எதிர்பார்க்கப்படும் விசேடமாக இக்கருத்தரங்கிற்கு வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் மாணவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.